அரசியல்வாதியாகும் கோவை சரளா!!!

5th of June 2014
சென்னை:மலையாள வெற்றிப்பட இயக்குனர் சசிசங்கர் ‘பேரழகன்’ தமிழ்ப் படத்திற்கு பிறகு இயக்கும் படம் ‘பகடை பகடை’. இப்படத்தில் தெலுங்கில் 30 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் ஃபிலிம்ஸ், விஸ்டம் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

இளமையான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தில் கோவை சரளா அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது,

‘கேரளத்தின் முக்கியமான இயக்குனர்களில் சசிசங்கரும் ஒருவர். அவர் மலையாளத்தில் இயக்கிய ‘குஞ்ஞி கூனன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதே படம் தமிழில் சூரியா நடிப்பில் ‘பேரழகன்’ படமாக வெளிவந்தது. சசிசங்கர் ‘பகடை பகடை’ படத்தின் கதயை என்னிடம் சொன்னபோது மிகவும் பிடித்துவிட்டது. உடனே நடிக்க சம்மத்திதேன். இதில் எனக்கு அரசியல்வாதி வேடம். மிகவும் ரசித்து நடித்துள்ளேன். என்
 
னுடன் சிங்கமுத்து நடித்துள்ளார். எந்த படத்திற்குமே நான் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் டப்பிங் பேசியது கிடையாது. ‘காஞ்சனா’ படத்திற்கு ஒரு நாள் தான் பேசினேன். இந்தப் படத்திற்கு டப்பிங் பேச 3 நாட்கள் ஆனது. அதிக நாட்கள் டப்பிங் பேசியது இந்தப் படமாகதானிருக்கும். இப்படம் ஜாலியான ஒரு பொழுது போக்கு படமாக வந்துள்ளது’’ என்றார்.

Comments