விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார்!!!
29th of June 2014
சென்னை:விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சென்னை:விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத
தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட
இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை
கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின்
வாழ்வில் இன்று முக்கிய தினம்.
டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமதியான டிடிக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் அவ்வப்போது படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
காண்போர் அனைவருக்கும் கலகலப்பூட்டும் டிடியின் இல்லற வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள்.
Comments
Post a Comment