தற்போது தனுசை விட சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி நிற்கிறது!!!

29th of June 2014
சென்னை:சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவரே தனுஷ்தான். அதோடு தனது தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தையடுத்து இப்போது டாணா படத்திலும் அவரை நடிக்க வைத்து வருகிறார் தனுஷ். ஆனால் தற்போது தனுசை விட சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி நிற்கிறது.

இதனால், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மீது தனுசுக்கு பொறாமை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, மேலும், தற்போது சிவகார்த்திகேயனின் சம்பளம் எகிறி விட்டபோதிலும், அவரை வைத்து தான் தயாரிக்கும் படத்துக்கு அவர் குறைவான சம்பளமே தருவதாக கூறி வருவதாகவும் செய்திகள் பரவியுள்ளன.


ஆனால். இதுபற்றி சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில், தனுஷ் இந்திக்கு சென்றிருப்பதால், தமிழில் அவர் இடத்தை பிடிக்கப்போவதாக நான் சொன்னது உண்மை. ஆனால், அப்போது அவரோ, இன்னும் 10 வருசத்துக்கு தமிழில் என் இடத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று அதே மேடையில் எனக்கு பதில கொடுத்தார். அதற்காக அவர் என்னை போட்டியாக நினைக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் , அதில் துளியும் உண்மையில்லை. தனுஷைப்பொறுத்தவரை எனது வளர்ச்சியில் ஒவ்வொரு விசயத்திலும் இருக்கிறார். என் வளர்ச்சியைப் பார்த்து சந்தோசப்படுகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு அண்ணனாகவும் இருந்து என்னை அரவணைத்து வருகிறார் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், எங்களுக்கிடையே டாணா படத்திற்காக சம்பள பிரச்சினை எழுந்திருப்பதாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. இதுவரை அவரிடம் நான் சம்பளம் கேட்டதேயில்லை.அவராக பார்த்து என்ன கொடுக்கிறாரோ அதைத்தான் வாங்கி வருகிறேன் என்கிறார்.

Comments