விஜய் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டி!!!

27th of June 2014
சென்னை:இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட விஜய் சென்னையில் இல்லை. ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் வழக்கமாக அவர் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட இந்த வருடம் இல்லை. அவரது ரசிகர்கள் மட்டும் தங்கள் பங்கிற்கு வழக்கம்போல் அமர்க்களம் பண்ணிவிட்டார்கள்.
 
ஆனால் படப்பிடிப்பில் இருந்து ரிலாக்சான விஜய் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அனிருத், காமெடி நடிகர் சதீஷ், ‘கத்தி’யில் வில்லனாக நடிக்கும் நீல்நிதின் முகேஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Comments