முதன்முறையாக இரட்டை வேடத்தில் சமந்தா!!!

4th of June 2014
சென்னை:சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடிக்கும் படம் பத்து எண்ணுரதுக்குல்ல.
இப்படத்தை கோலி சோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு கதாபாத்திரம் கிராமத்து பெண்ணாகவும், மற்றொன்றில் நகரத்து பெண்ணாகவும் வருகிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் பட வாய்ப்பை உதறிதள்ளியதாக பேசப்படுகிறது. இதுதவிர, சமந்தா தற்பொழுது விஜய்யுடன் கத்தி திரைப்படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடிக்கிறாராம். கோலிசோடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படமென்பதாலும், விக்ரம் - சமந்தா ஜோடி நடிக்கும் படமென்பதாலும் எதிர்பார்ப்புக்கள் கூடிவருகின்றன.

Comments