நமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான்: நடிகர் கன்னட ரவிச்சந்திரன்!!!


10th of June 2014
சென்னை::எழுதும்போது ஓம் போடுவது, இசைக்கும்போது இளையராஜா என மனசுக்குள் எழுதிக் கொள்ள வேண்டும். அவர்தான் இசையின் ஓம்காரம், என்றார் கன்னட நடிகர் வி ரவிச்சந்திரன்.மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், கன்னடத்தில் த்ரிஷ்யா என்ற பெயரில் தயாராகியுள்ளது. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வி ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர் நடித்த படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் இளையராஜா.படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார்.

விழாவில் ரவிச்சந்திரன் பேசியதாவது: மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதே என் வாழ்வில் மிகப்பெரிய விஷயம். நாம் அனைவருமே அவர் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள். தினமும் என் கார் இளையராஜாவின் பாடல்கள் ஒலிப்பதற்கு முன் நகராது.இளையராஜாவின் பல பின்னணி இசைக் கோர்வைகளை காப்பியடித்து நான் என் படங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த பின்னணி இசையை வைத்தே பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். அதைப் பாடும் பாடகர்களுக்குக் கூட அது தெரியாது. இளையராஜா தன் இசையில் அனைத்தையுமே தந்துவிட்டார். நாம் புதிதாக இசையமைக்க எதுவும் இல்லாத அளவு அனைத்தையும் மிக அட்வான்ஸாகவே தந்துவிட்டார் அவர்.இசையின் ஓம்காரம்பொதுவாக நாம் எழுதும்போது ஓம் என்று போட்டுவிட்டுத்தான் தொடங்குவோம்.
 
அதே போல இசைக்கத் தொடங்கும்போது மனதுக்குள் இளையராஜா என்று எழுதிக் கொள்ள வேண்டும். காரணம், இசையின் ஓம்காரம் அவர். ஒரு இடத்தில் அவர் கால் படுகிறது என்றாலே.. அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை நாம் உணரலாம். இன்றும்கூட அவரிடம் தெரியும் சிரத்தையும், அர்ப்பணிப்பும் என்னை அசர வைக்கிறது.முன்பு ஒரு முறை என் தந்தை வீராசாமி, இயக்குநர் ஸ்ரீதருடன் இணைந்து ட்யூன் போட்டுக் கொண்டிருந்த அதே இளையராஜாவைத்தான் நான் இன்றும் பார்க்கிறேன். அன்றைக்கு நான் நடிகனாக இல்லை. அதன் பிறகு, இளையராஜாவின் இசை கேட்டு, நானும் ஒரு நடிகனானேன்.விதிஇளையராஜாவிடம்தான் நான் முதலில் இசை கேட்டுப் போயிருக்க வேண்டும். எனக்கு அவர் மீது அத்தனை அன்பு. ஆனால் விதி என்னை அம்சலேகாவிடம் அழைத்துப் போய்விட்டது.இயக்குநர் வாசுதான் இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். பாடல்களை விட, பின்னணி இசைக்கு மிக முக்கியத்துவம் உள்ள படம் இது.
 பின்னணி இசையில் ராஜா சார்தான் என்றும் மாஸ்டர்... அவரைப் போல இதில் வெற்றி பெற்றவர் யாருமில்லை.
 
இவ்வாறு ரவிச்சந்திரன் பேசினார்.யாஷ்நடிகர் யாஷ் பேசும்போது, "இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஜோதி படத்தில் ஒரு பாடல்.. ஜொதயிலே.. இன்றும் இந்தப் பாடல்தான் எனக்கு விருப்பமானது. ஷூட்டிங்கிலிருந்து வீட்டுக்குப் போகும்போதுகூட, இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்பேன். உலகில் பலர் பாடல்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இசையை உருவாக்குபவர் இளையராஜா மட்டும்தான்", என்றார்.பி வாசுஇயக்குநர் வாசு பேசுகையில், "என் 19 வயதில் இந்த சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 62 படங்கள் இயக்கியுள்ளேன். அவற்றில் 30 படங்கள் இளையராஜா இசையமைத்தவை. கிட்டத்தட்ட அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள், பாடல்கள். த்ரிஷ்யா படத்தின் மிகப் பெரிய பலம், அதன் பின்னணி இசைதான். அது இத்தனை உயிர்ப்புடன் வந்ததற்கு காரணம் இளையராஜாதான். ராஜா சாருடன் இணைந்து பணியாற்றுவது நமது அதிர்ஷ்டம். அவர் ஒரு முறை சொன்னார், 'எல்லாருக்கும் எங்கே இசை இடம்பெற வேண்டும் என்பது தெரியும்.. ஆனால் பலருக்கும் எங்கே இசை வரக்கூடாது என்பது தெரிவதில்லை,' என்று. ராஜா சாருக்கு இரண்டுமே தெரியும். அதனால்தான் அவர் இசையில் வந்த படங்கள் இன்னும் மறக்க முடியாதவைகளாகத் திகழ்கின்றன," என்றார்.

Comments