பிரணிதாவுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோயின்!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

2nd of June 2014
சென்னை:
சமந்தா சிபாரிசால் 3வது படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறார் பிரணிதா. தமிழில் ‘சகுனி படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் பிரணிதா. படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் புதிய பட வாய்ப்பு எதுவும் பிரணிதாவுக்கு வரவில்லை. இந்நிலையில் சமந்தா நடித்த டோலிவுட் படமான ‘அத்தரின்ட்டிக்கி தாரிடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர். வெளியூரில் இருந்தாலும் அடிக்கடி செல்போனில் பேசி சமந்தாவுடன் நட்பை வளர்த்துக்கொண்டார் பிரணிதா. அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது.
 
இப்போது ஜூனியர் என்.டி. ஆருடன் சமந்தா நடிக்கும் ‘ரபசா படத்திலும் பிரணிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தா நடிக்கும் படத்திலும் பிரணிதாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தான் நடிக்கும் படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும்பட்சத்தில் அதை பிரணிதாவுக்கே தரவேண்டும் என்று சமந்தா சிபாரிசு செய்வதாக கிசு கிசு கிளம்பியது. அது உண்மைதான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.வழக்கமாக நடிகைகள் சான்ஸ் பிடிக்க ஹீரோக்களுடன்தான் நெருங்கி பழகுவார்கள். அப்படி பழகியும் தனக்கு வாய்ப்புகள் வராததால் நொந்துபோனார் பிரணிதா. அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தார். சோலோ ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைப்பது அரிது என்பது உறுதியாகிவிட்டது.
 
 அதனால் முன்னணி ஹீரோயினின் நட்பை பிடித்து அவரது படங்களில் 2வது ஹீரோயினாக வலம் வரலாம் என அவர் கணக்கு போட்டார். அதன்படி சமந்தாவின் நட்பு அவருக்கு கிடைத்தது. அத்துடன் இப்போது அவரது சிபாரிசும் கிடைப்பதால் சந்தோஷமாகியிருக்கிறார் பிரணிதா.

Comments