சென்னை:இன்று தமிழ்சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாண்டிராஜ். சினிமா என்பது வியாபாரமாகிவிட்ட இந்த சூழ்நிலையில் சமூகத்துக்கு சினிமா மூலம் ஏதாவது நல்ல கருத்துக்களை சொல்லும் விதமாக மட்டுமே படம் எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மிகச்சிலரில் இயக்குனர் பாண்டிராஜும் ஒருவர்.
பசங்க’ படம் மூலம் தனது எண்ணத்தை சரியாக பிரதிபலிக்கவும் செய்தார். தான் மட்டுமல்லாது தன்னைப்போன்றவர்களும் நல்ல படைப்புகளை தரவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டி தனியாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
தற்போது தமிழ்சினிமாவின் மிக முக்கிய காம்பினேஷனாக கருதப்படும் சிம்பு-நயன்தாரா இருவரையும் இணைத்து ‘இது நம்ம ஆளு’ பட்த்தை இயக்கி வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் பாண்டிராஜுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment