சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கோச்சடையானை பின்னுக்கு தள்ளிய விமல் படம்!!!


                                                    5. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
சென்னை மாநகரில் சந்தானத்தின் படம் சென்ற வார இறுதியில் 1 லட்சத்தை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து வாரங்களில் இதன் சென்னை சிட்டி வசூல் 1.87 கோடி.
 
                                             4. உன் சமையலறையில்
Chennai Box Office
பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த இப்படம் இளையராஜாவின் இசை இருந்தும் சுமாரான ஓபனிங்கையே பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 15.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
3. யாமிருக்க பயமே
கொரியன் படத்தின் தழுவலான இப்படம் சென்ற வார இறுதியில் 16.6 லட்சங்களையும், வார நாள்களில் 19.9 லட்சங்களையும் தனதாக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 2.5 கோடிகள்.

                                                                2. கோச்சடையான்
மூன்றாவது வாரத்திலேயே விமல் படத்திடம் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளது கோச்சடையான். சென்ற வார இறுதியில் 32.7 லட்சங்களையும், வார நாள்களில் 66.4 லட்சங்களையும் இப்படம் வசூலித்தது. இதுவரையான சென்னை சிட்டி வசூல் 5.3 கோடிகள்.
 
                                                                 1. மஞ்சப்பை
விமலின் மஞ்சப்பை இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 195 திரையிடல்களில் 65.1 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

Comments