ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்!!!

3rd of June 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார் சிம்புதேவன். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. அதனால், இப்போது ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரிடம் பேசியிருக்கிறார்கள்.
 
அதேப்போல், முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கும் முடிவில்தான் இருந்தார்கள். ஆனால், வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்துக்கு பல மாதங்களாக பாடல்களை கொடுக்காமல் அவர் இழுத்தடிப்பதைப்பார்த்தவர்கள, இப்போது தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்து விட்டனர்.
 
தமிழில், சிங்கம், சிங்கம்-2, மன்மதன் அம்பு உள்பட பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த அவர், விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் இசையமைத்திருந்தார். ஆக, இப்போது இரண்டாவதாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

Comments