விஷால் அம்மாவாக நடிக்க இந்தி நடிகை ரேகா மறுப்பு!!!

4th of June 2014
சென்னை:விஷால் அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டார் ரேகா.மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகள் ரேகா. பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அமிதாப் உள்பட பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் பின்னர் ஹிருத்திக் ரோஷன் அம்மாவாக கிரிஷ் என்ற படத்தில் நடித்தார். தற்போதும் அவர் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்றனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
 
 தற்போது ஹரி இயக்கி வரும் படம் ‘பூஜை. விஷால்-ஸ்ருதி ஹாசன் ஜோடி. இப்படத்தில் விஷால் அம்மாவாக ரேகாவை நடிக்க வைக்க எண்ணினார் ஹரி. அவரிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார்.இதுபற்றி ஹரி கூறும்போது, ‘விஷாலின் அம்மாவாக நடிக்க ரேகாவை சந்தித்து கால்ஷீட் கேட்டேன். சில நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாலும் காட்சிகளை முடித்துவிட எண்ணி இருந்தேன். ஆனால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படத்தை ஏற்கவில்லை என்றார். தற்போது இக்கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கோவையில் நடந்து வருகிறது.

Comments