27th of June 2014
சென்னை:எ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ட் நிறுவனம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அனேகன்’ திரைப்பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. ‘அனேகன்’ படத்தின் இசை வெகு விரைவில் வெளிவரவுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கிய “அயன், கோ, மாற்றான்” படங்களைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்திற்கான இசையை பற்றி இயக்குனர் கூறுகையில், “இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் கதையின் தன்மையையும், காட்சியையும் பொறுத்து வெவ்வேறு பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்
தமிழ் படம்’ படத்தை இயக்கிய C.S.அமுதன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். சில வருடங்களுக்கு முன், விளம்பரப் படங்களில் பணியாற்றிய நேரத்தில் C.S.அமுதனை, கே.வி.ஆனந்த் சந்தித்துள்ளார். விளம்பரப் படங்களுக்காக அமுதன் பாடல்களை எழுதியிருப்பதை நினைவு கூர்ந்த ஆனந்த் இந்தப் படத்தில் அவரைப் பாடலை எழுத அழைத்துள்ளார்.
C.S.அமுதன் எழுதிய பாடலை பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில் “என் படத்தில் மென்பொருள் ஊழியர்கள், வார விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாட நினைப்பார்கள். அவர்களின் மனநிலை அறிந்து பாடலை எழுதும் பாடலசிரியர் வேண்டும் என்று நினைத்தேன். அப்போது C.S.அமுதனை நான் தேர்வு செய்தேன், ஏனெனில், அவர் இயற்கையாகவே மிகவும் ஜாலியான நபர்”, என்கிறார்.
Comments
Post a Comment