ஆவிகளை வித்தியாசமாக டீல் செய்ய ட்ரெய்னிங் எடுத்த ஜித்தன் ரமேஷ்!!!

27th of June 2014
சென்னை:சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ரமேஷ் நடித்து 2005ல் வெளியான படம் ‘ஜித்தன்’. இந்தப்படத்தில் நடித்ததால் தான் அவருக்கு ‘ஜித்தன்’ ரமேஷ் என அடையாளப்பெயரும் கிடைத்தது. வின்செண்ட் செல்வா இயக்கிய இந்தப் படத்தில் சாதாராண மனிதன் ஒருவன் திடீரென உருவம் இல்லாத மனிதனாக மாறுவதும் அதன்பின் நடக்கும் பரபரப்பும்தான் கதை.
 
தற்போது ஒன்பது வருடம் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். ஜித்தன் ரமேஷ் தான் இதிலும் கதாநாயகன். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய வின்செண்ட் செல்வா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுவதோடு நின்றுவிட, படத்தை இயக்குகிறார் புதியவரான ராகுல் பரமஹம்சா.
 
ஹாரர் வகைப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் ஆவி ஒன்று ஆக்கிரமித்திற்கும் வீட்டிற்குள் நுழைகிறார் ரமேஷ். ஆவி என்றால் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆவியாக நடிகை சிருஷ்டி நடித்திருக்கிறார்.
 
படத்தில் ரமேஷில் கேரக்டர் ஆவிகளை டீல் செய்யும் நபராக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் உள்ள அந்த ஆவியை எப்படி மென்ட்டலாக டீல் செய்வது என 25 நாட்கள் ரமேசுக்கு பயிற்சி அளித்திருக்கிறார் மலேசியாவில் இருந்து வந்த பாரானார்மல் சயின்டிஸ்ட் ஒருவர். இந்தப்படத்தில் ரமேஷுடன் சேர்ந்து சந்தானம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Comments