'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக்கோடு, படத்தின் பிரத்யேக தீம் மியூசிக்கையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் அனிருத்!!!
14th of June 2014
சென்னை:கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக்கோடு, படத்தின் பிரத்யேக தீம் மியூசிக்கையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் புகைப்படங்களோ, விஜய் என்ன பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்றோ எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் "'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக், 22ம் தேதி வெளியாக இருக்கிறது. அத்தோடு முதன் முறையாக இந்த டிஜிட்டல் போஸ்டரை தீம் மியூசிக்கையும் வெளியிட இருக்கிறோம். படத்தின் டிஜிட்டல் போஸ்டரோடு தீம் மியூசிக்கையும் இணைத்து YOUTUBE தளத்தில் வெளியாகும்" என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருப்பதால் 'கத்தி' படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment