9th of June 2014
சென்னை::விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவரும், கில்லி, தூள், வீரம் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவருமான பரதன் இயக்கும் படம் 'அதிதி'. நந்தா, அனன்யா, புதுமுகம் நிகேஷ்ராம் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'காக்டெய்ல்' படத்தின் ரீமேக் ஆகும்.
வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்குப் பிறகு, படத்திற்கு கூடுதலாக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் கதையோட்டத்திற்காக யு/ஏ கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். யு சான்றிதழ் பெறுவதற்காக படத்தில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல், கதை சிதையாமல் இருந்தாலே போதும் என்ற எண்ணத்தோடு, 'அதிதி' படக்குழுவினரும் 'யு/ஏ' சான்றிதழோடு படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

Comments
Post a Comment