3rd of June 2014
சென்னை:சிம்பு நடிச்ச படம் வருதோ இல்லையோ, அவரைப் பத்தி ஏதாவது ஒரு செய்தி
அடிக்கடி வந்துடும். இல்லை, சிம்புவே அவரைப் பத்தி ஏதாவது ஒரு செய்தியை
வரவைச்சிடுவாரு. 2012-ல வந்த 'போடா போடி' படத்துக்கு அப்புறமா அவர் நடிச்ச
எந்த படமும் இதுவரைக்கும் வரலை. இப்படி நடிச்சிட்டிருக்கிற படங்களும் எப்ப
வரும்னு தெரியாது.
'வாலு, இது நம்ம ஆளு, வேட்டை
மன்னன்' என கையில மூணு படம் வச்சிருந்தாலும் எது முதல்ல வரும்னு
சிம்புவுக்கே தெரியுமான்னு தெரியாது. இருந்தாலும் தனது ரசிகர்களை உற்சாகமா
வச்சிக்க சிம்பு தினமும் ஏதாவது ஒரு ட்வீட் போட்டு
அசத்திக்கிட்டேயிருப்பாரு. இல்லை, ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அது
பற்றிய செய்திகள் பத்திரிகைகள்ல வரவச்சிடுவாரு. சிம்புவோட இந்த டெக்னிக்
பலருக்கும் தெரியாது. ட்விட்டர்ல சுடச் சுட புகைப்படத்தை வெளியிடற நடிகர்
அவர் மட்டும்தான். எந்த பார்ட்டிக்கு போனால் கூட அது சம்பந்தமான
புகைப்படத்தை அப்பவே போட்டுருவாரு.
இப்படித்தான்
சமீபத்துல ஒரு ட்வீட் பண்ணி புதுசா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிச்சி
வச்சிருக்காரு. “நான் ஒரு முழுமையான, சரியா நடிகனான்னு எனக்குத் தெரியாது.
ஆனால், என்னுடைய ரசிகர்கள் மாதிரி சிறந்த ரசிகர்கள் வேறு எந்த
நடிகர்களுக்கும் கிடையாது. என் ரசிகர்களால நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்,” என
சொல்லியிருக்கிறார்.
சிம்புன்னாலே ஏதாவது ஒரு
வம்பை ஆரம்பிச்சி வைக்கிறது வேலையாப் போச்சின்னு எல்லாரும் புலம்பினாலும்
அதைப் பத்தியெல்லாம் கவலைப்படமா இருக்கிறதுதான் சிம்புவோட குணம். அதனால,
அவர் சொன்னதை இதுவரைக்கும் யாரும் சீரியசா எடுத்துக்கலை. இருந்தாலும், சமூக
வலைத்தளங்கள்ல இதுக்கு கண்டிப்பா சரியான பதிலடி இருக்கும்.
Comments
Post a Comment