பிக்கப் ட்ராப்புல ‘பாஸ்ட் ட்ராக்’கை மிஞ்சிட்டார் ஆர்யா” – பார்த்திபன் கலாட்டா!!!

29th of June 2014
சென்னை:மேடையில் பேசுவதில் பார்த்திபனை யாராவது மிஞ்சமுடியுமா..? அதிலும் ஆர்யா மாதிரி ஹீரோயின்களின் ஆதர்ச நாயகன் சிக்கிவிட்டால் கேட்கவா வேண்டும். ‘அமரகாவியம்’ இசைவெளியீட்டு விழாவில் மைக் பிடித்த பார்த்திபன், “இந்தியாவில் ஒன்றுசேர்ந்து ஆட்சியமைத்திருக்கும் 272 எம்.பிக்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்திருந்தால் கூட த்ரிஷாவையும் நயன்தாராவையும் ஒரே மேடையில் கலந்துகொள்ள வைத்திருக்கமுடியாது. ஆனால் அதை ஆர்யா சாதித்திருக்கிறார்.
 
நம்ம இந்தியாவில் இருந்து ஆர்யாபட்டாங்கிற ஏவுகணையை அனுப்புனாங்க.. அது குறிதவறாம இலக்கை தாக்கும். அதேமாதிரி இந்த ஆர்யாவும் வச்ச குறி தப்பாம சரியா இலக்கை ரீச் பண்ணிரும். நான் ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேசனுக்கு பாஸ்ட் ட்ராக் கால்டாக்சில போய் இறங்கினேன். அப்பா அந்த ட்ரைவர் ரொம்ப பெருமையா சொன்னான்,
 
பிக்கப் பண்றதுல எங்க பாஸ்ட் ட்ராக் தான் நம்பர் ஒன்னு அப்படின்னு. அப்ப நான் சொன்னேன் பிக்கப், ட்ராப் எல்லாத்துலயும் எங்க ஆர்யா தான் நம்பர் ஒன். அதுல அவர அடிச்சுக்க முடியாதுன்னு” என அமரகாவியம் விழாவில் ஆர்யா காவியம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் பார்த்திபன்.
 
மேலும் அவரது தம்பி சத்யா பற்றி சொல்லும்போது “இப்ப இருக்குற பல ஹீரோயின்கள்கூட இனி சத்யா நடிக்க முடியாது.. காரணம் அவங்கள்லாம் சத்யாகூட அண்ணி ரேஞ்சுக்கு கிசுகிசுக்கப்பட்டவங்க.. சத்யாவுக்கு புது ஹீரோயின் தான் தேடனும். ஆனா சத்யா அவரோட அண்ணன் மாதிரி ஆகவேண்டாம்” என சத்யாவுக்கு ஜாலியான அட்வைசும் பண்ணினார் பார்த்திபன்.

Comments