29th of June 2014
சென்னை:சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடிக்கும் எடக்கு என்ற படத்தின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது என்ன எப்ப இந்த படத்தை விஜய்சேதுபதி நடிக்க் ஒப்புகொண்டார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாதுறையினரே கேள்வி எழுப்பினர்.
ஆனால் இதில் உண்மையில் நடந்தது என்னெவென்றால் இது ஒரிஜினல் தமிழ் படம் கிடையாதாம். ஏழு வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதி துணை நடிகராக நடித்தப்படமாம். வில்லனின் அடியாட்களில் ஒருவராக அவர் தோன்றுவாராம். இப்போது விஜய்சேதுபதி தமிழில் நல்ல மார்க்கெட்டில் இருப்பதால் அதை மனதில் வைத்து இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். மேலும் இந்த படத்தில் அவருக்கு வேறு ஒருவரை வைத்து டப்பிங் செய்துள்ளனராம்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய்சேதுபதி எடக்கு படம் நான் நடித்த கன்னடப்படம். அதில் நாலு சீனில்தான் நடித்திருக்கிறேன் என்று அனைவருக்கும் தகவல் சொல்லி வருகிறார். காரணம் ரம்மி கொடுத்த பாடமாம். அப்படத்தில் அவர் ஹீரோவின் நபராக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அவர்தான் ஹீரோ என்பது போல விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியதால் விஜய் சேதுபதிக்கு சிறு சறுக்கலை ஏற்படுத்தியது.இதனால் இந்த முறை உஷாரானாஅர் விஜய் சேதுபதி.
Comments
Post a Comment