20th of June 2014
சென்னை::இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் நட்பாக பழகினாலே, சர்ச்சைகள் ஏற்படும் என்று நடிகைகள் விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், ப்ரியா ஆனந்த் மட்டும் எந்த சர்ச்சைக்கும் அஞ்சாமல், அவருடன் நட்பு வளர்த்து வருகிறார்.
அதைப் பார்த்து சிலர், இருவருக்கும்
காதல் ஏற்பட்டுள்ளதாக கதை கட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து, ப்ரியாவை
கேட்டால், 'அனிருத்தும், நானும் நெருங்கி பழகுவது உண்மை. எங்களுக்கிடையிலான
நட்புதான் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஆனால், இதில் துளியும் காதல் இல்லை. ஒரு நாளும், நட்பை காதலாக மாற்றிக் கொள்ளமாட்டேன். மீடியாக்கள், இதை காதல் என்று களங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்' என்கிறார் ப்ரியா ஆனந்த்.
ஏற்கெனவே, அனிருத் தன்னை விட வயதில் பெரியவரான ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருப்பதை போன்று புகைப்படங்கள் நெட்டில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment