25th of June 2014
சென்னை:லிங்கா’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்து, அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களாக ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் பங்குபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக பிரத்தியேகமாக கடைத் தெரு அரங்கம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதில் ரஜினி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் சந்தித்துப் பேசும் நகைச்சுவைக் காட்சிகள் படமாகும் போதே அனைவரையும் சிரிக்க வைத்து விட்டதாம்.
எந்திரன்’ படத்திற்குப் பிறகு ரஜினியுடன் சந்தானமும், அனுஷ்கா முதன் முறையாகவும் இணைந்து நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘லிங்கா’ வேகமாக வளர்ந்து வருகிறது.
Comments
Post a Comment