26th of June 2014
சென்னை:கடந்த மாதம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கிய இந்தப்படம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட என்கிற பெருமையையும் பெற்றது.
தற்போது தமிழில் இந்தப்படத்தை ரீமேக் செய்யவும் அந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்களாம். அப்போது நாகேஸ்வரராவ் கேரக்டரில் கமலும் நாகார்ஜுனா கேரக்டரில் மாதவனும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்த அவர்கள் இருவரிடமும் பேச்சு வார்த்தையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கமல் ஏற்கனவே ‘மனம்’ படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து நாகேஸ்வரராவுடன் தனக்குள்ள நெருக்க்கத்தை வெளிப்படுத்தினார். அதேபோல மாதவன் ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமாரின் டைரக்ஷனில் ஏற்கனவே ‘யாவரும் நலம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதனால் இவர்களை இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைப்பது எளிது என்றும் நம்புகிறார்களாம். அப்படி இவர்கள் இருவரும் நடிக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அன்பே சிவம், மன்மதன் அம்பு படங்களை தொடர்ந்து இது அவர்கள் கூட்டணி நடிப்பில் ஹாட்ரிக்காக அமையும்.
Comments
Post a Comment