25th of June 2014
சென்னை:Taகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்ததையொட்டி, இப்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகிறார்கள்! ‘லிங்கா’வின் கதை பழங்காலம், நிகழ்காலம் என வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது மாதிரி என்று கூறப்படுகிறது.
இதில் பழங்காலத்து பின்னணியில் வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், இன்றைய காலகட்டத்து காட்சிகளில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கிறார். அதாவது படத்தின் கதைபடி இன்றைய காலகட்டத்து ரஜினிக்கு அந்த காலத்து ரஜினி - சோனாக்ஷி சின்ஹா தாத்தா – பாட்டி உறவுமுறையாம்!
ஆனால் கதை அந்த காலட்டத்தில் நடைபெறுவதால் ரஜினி – சோனாக்ஷி சின்ஹா இளமை தோற்றத்தில் தான் வருவார்களாம்! இந்த காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்! ஆக, ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில் ரசிகர்களுக்கு பல சர்பரைஸ்கள் காத்திருக்கிறது!
Comments
Post a Comment