ஹேப்பி பர்த்டே சுராஜ் வெஞ்சாரமூட்!!!

20th of June 2014
சென்னை:மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என அனைவரையும் அவர்களைப்போலவே அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார் அவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட்.
2
005ல் ‘ராஜமாணிக்கம்’’ படத்தில் மம்முட்டிக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்த சுராஜ். கடந்த 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
 
அதிலும் நான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான அதிரடி நகைச்சுவை நடிகரான சுராஜ் இந்த விருதை பெற்றிருப்பது ‘பேரறியாதவர்’ என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான்.
 
இதற்குமுன் 2010ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப்பெற்ற நகைச்சுவை நடிகரான சலீம்குமாரை தொடர்ந்து, காமெடி நடிகர்களாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பிக்க முடியும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் சுராஜ். இன்று பிறந்தநாள் காணும் சுராஜ் வெஞ்சாரமூடுக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments