23rd of June 2014
சென்னை:தற்போதெல்லாம் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் திரை நட்சத்திரங்கள் எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என ரசிகர்களால் அறிந்துகொள்ளமுடிகிறது.
சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிவிட்ட நடிகர், நடிகைகள் அவ்வப்போது சிலரால் பாதிக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வகையில் தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர் சமீபத்தில் திருமணமாகி மாலத்தீவுகளுக்கு ‘ஹனிமூன்’ சென்றிருக்கும் நடிகை அமலாபால் தான்.
மாலத்தீவில் தன் கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தையும், அவர்கள் ஹனிமூனுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார் அமலாபால்.
துவக்கத்தில் அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் ரசிகர்களால் ட்விட்டரில் பகிரப்பட்டபோது சிலர் அந்த படங்களைப் பற்றி மோசமான கருத்துகளைத் தெரிவித்து அமலாபாலை மூட்-அவுட் செய்துவிட்டனர்.
இதனால் அமலாபால் ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மிக மோசமான சண்டைக்கு வழிவகுத்திருக்கிறது. எனவே அந்த படங்களை அமலாபால் உடனே ட்விட்டரிலிருந்து நீக்கிவிட்டார்.
ஹனிமூன் கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதிகளை மூட்-அவுட் செய்துவிட்டதால் கவலையில் இருக்கின்றனர் அமலாபால் ரசிகர்கள்.
Comments
Post a Comment