பிரபல இயக்குனர் ராமநாராயணன் மரணம்!!!

23rd of June 2014
சென்னை:பிரபல தமிழ் பட இயக்குனர் ராமநாராயணன் மரணமடைந்தார். இயக்குனர் ராமநாராயணன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 126 திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்தியாவிலேயே அதிக திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர் ராமநாராயணன்.
இவரது சொந்த ஊர் காரைக்குடி ஆகும். காரைக்குடியில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக 1989 மற்றும் 91 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இயக்குனர் ராமநாராயணன் உடல் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. இவருக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Comments