பார்ட்டி வைத்து பட வாய்ப்பு பெறுவதில் பழைய நட்சத்திர ஜோடியையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது: ப்ரியா ஆனந்த்!!!
23rd of June 2014
சென்னை:பார்ட்டி வைத்து பட வாய்ப்பு பெறுவதில் பழைய நட்சத்திர ஜோடியையே
மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது என்று நடிகை ப்ரியா ஆனந்த் பற்றி
கிசுகிசுக்கிறார்கள் திரையுலகில். நான் சுத்த தமிழச்சி, மாயவரத்துக்காரி
என்றெல்லாம் பேட்டிகளில் அறிக்கைவிடும் ப்ரியா ஆனந்த், சான்ஸ் வாங்குவதில்
பலே பார்ட்டியாக இருக்கிறாராம்.
கதாநாயகியாய் வெற்றி பெற வெறும் திறமை
மட்டும் போதாது என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் ப்ரியா ஆனந்த்.
அந்தப் புரிதல் காரணமாகவோ என்னவோ, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் படம்
முடியும்வரை நெருக்கமான உறவை மெயின்ட்டெயின் பண்ணுகிறாராம்.
தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களுக்கு கம்பெனி கொடுக்கும்விதமாக அவர்களுடன் அடிக்கடி பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இப்படி ஒவ்வொரு ஹீரோ உடன் வெளியே செல்வதில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டதால், இதற்காகவே சென்னை ஹாரிங்டன் ரோட்டில் புதிய ப்ளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த ப்ளாட்டுக்கு வந்துவிடும் ப்ரியா ஆனந்த், அங்கிருந்தபடியே தன் நட்சத்திர நண்பர்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.
அவர்கள் வந்த பிறகு விடிய விடிய பார்ட்டிதான். ப்ரியா ஆனந்தின் நட்பு வட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர் அதர்வா. ஏறக்குறைய தினமும் ப்ரியா ஆனந்தை சந்தித்துவிடுகிறார் அதர்வா. இவர் தவிர கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு என ப்ரியா ஆனந்தின் நண்பர்கள் பட்டியல் நீள்கிறது.
Comments
Post a Comment