கூலிப்படையினரைப் பற்றி சொல்லும் 'நீயெல்லாம் நல்லா வருவடா!!!

22nd of June 2014
சென்னை:சென்னை:ஸ்.ஜி.பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் கிளாப் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'நீயெல்லாம் நல்லா வருவடா'. விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஆர்.நாகேந்திரன் இயக்குகிறார். சீமான், சுசிகணேசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரனுக்கு இது தான் முதல் படம்.

படம் குறித்து கூறிய நாகேந்திரன், "கடந்த இருபது வருடங்களில் சென்னையை அற்ற பிற தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் நட்புக்காகவும், ஜாதிக்காகவும், ரவுடிசத்திற்காகவும், அரசியலுக்காகவும் என கூலிப்படையினரை ஏவி கொலை செய்ய, சென்னையில் மட்டும் பணம் என்ற ஒரே காரணத்திற்காக கூலிப்படையினர் கொலை செய்கின்றனர்.
 
தான் யாரால் எதற்காக சாகிறேன் என்று கூலிப்படையினரால் கொல்லபடுபவனுக்கும், தான் எதற்காக இன்னொரு உயிரை பலி வாங்குகிறேன் என்று கொல்பவனுக்கும் தெரிவதில்லை. கூலிப்படையினரின் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படமே 'நீயெல்லாம் நல்லா வருவடா." என்றார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை லலித் ஆனந்த் எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Comments