இது நம்ம ஆளு' படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் கும்பகோணத்தில்!!!

11th of June 2014
சென்னை:முதன்முதலாக சிம்பு - பாண்டிராஜ் இணைந்துள்ள படம் ''இது நம்ம ஆளு பலவருட இடைவெளிக்கு பிறகு சிம்பு-நயன்தாராவை இந்தப்படத்தின் மூலம் இணைத்துள்ளார் பாண்டிராஜ். இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியாக உள்ளது. மேலும் இந்தப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து வந்த படப்பிடிப்பு பின்னர் தொய்வடைந்தது.
 
இந்நிலையில் ஒரு வழியாக இழுத்து பிடித்து, 'இது நம்ம ஆளு' படத்தின் ஷூட்டிங்கை இறுதிகட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகள் அங்கு இருக்கும் குளக்கரை, மற்றும் முக்கிய இடங்களில் படமாகி வருகிறது. சிம்பு தம்பி குறளரசன் இசையில் பதிவான பாடலுக்கு, சிம்பு-நயன்தாரா இருவரும் செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனர்.

Comments