மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றிருக்கிறார்!!!

16th of June 2014
சென்னை:ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. திருமணமான இவர் பல தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் வாடகைத் தாய் மூலம் சமீபத்தில் குழந்தை ஒன்றை பெற்றிருக்கிறார்.

நடிகர்கள் ஷாரூக் கான், ஆமீர் கானுக்குப் பிறகு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற திரையுலகப் பிரபலம் இவர்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகர் மோகன் பாபு விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன் எனக் கூறியிருந்தார். தெலுங்கு ஊடகங்கள் அவருடைய இளைய மகன் மஞ்சு மனோஜின் திருமணச் செய்தியாக இருக்கலாம் என்ற ஊகத்தில் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். ஆனால், அதை மனோஜும் மறுத்திருந்தார்.
 
இதனிடையே நேற்று காலை நடிகர் மோகன் பாபு அவருடைய மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விஷயத்தை வெளியிட்டார். கடவுள் மிகவும் இரக்கமானவர். என்னுடைய பாசத்துக்குரிய மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயானார். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இது,” என டுவிட்டர் மூலம் அந்த செய்தியை வெளிப்படுத்தினார் மோகன் பாபு.

Comments