காதல் கத்திரிக்காய் எல்லாம் சினிமா கேரியரை நாசம் பண்ணி விடும்: ஹன்சிகாவின் தாய்குலம் மகளுக்கு சீரியஸ் அட்வைஸ்!!!

16th of June 2014
சென்னை:சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில சிறிய படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி, பின்னர் மகளுக்கு சீரியஸ் அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

காதல் கத்திரிக்காய் எல்லாம் சினிமா கேரியரை நாசம் பண்ணி விடும். அதை விட்டொழித்தால் மட்டுமே சினிமாவில் சாதிக்க முடியும் என்று உரக்க சொல்லி மகளின் புத்தியை மாற்றினார். அதன்காரணமாகவே அதையடுத்து, சிம்புக்கும் அவரது காதலுக்கும் கல்தா கொடுத்த ஹன்சிகா இப்போது மறுபடியும் தனது மாஜி ஹீரோக்களுடன் உறவாடத் தொடங்கி விட்டார்.

அதன்காரணமாக, மீண்டும் ஆர்யாவுடன் மீகாமன், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, விஜய்யின் புதிய படத்திலும் நடிக்கயிருக்கிறார். மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அவர்களுடன் நெருக்கம் காட்டும் ஹன்சிகா, ரொமான்ஸ் காட்சிகளில் அவர்களுக்கு இனம் புரியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறாராம்.

இதனால் சமீபகாலமாக ஹன்சிகாவை ஓரங்கட்டிய ஹீரோக்கள்கூட இப்போது அவருக்கு மறைமுக சிபாரிசு செய்து வருகிறார்கள். இதையடுத்து கோடிகளை சொல்லியடித்து கல்லா கட்டுவதில் தீவிரமடைந்திருக்கிறார் நடிகை.

Comments