21st of June 2014
சென்னை:திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சென்னை தரமணியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செவ்வனே இயங்கி வருகின்றது.
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும், பட்டப் படிப்பில்; தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் இயக்குதல் பிரிவிலும், அரசு அங்கீகாரம் பெறப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து அரசு ஓவியம் மற்றும் கலைக்கல்லுட்ரியில் பெற்ற பட்டம், பி.எஸ்.சி. (விஷுவல் கம்யூனிகேஷன், பி.எஸ்.சி (மாஸ் கம்யூனிகேஷன்), பி.எஸ்.சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்.சி (அனிமேஷன் அல்லது.
விஷுவல் எஃபக்ட்ஸ்) மற்றும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டயப் படிப்பில் தேர்ச்சி மற்றும் ஓவியம் வரைதல் பயிற்சியில் அவசியம் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பிரிவிற்கும் இக்கல்லூரியில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பிற்காக 2014-2015-ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்காக 05.07.2014 மாலை 5 .00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் சேர்ந்து, கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ/மாணவியர், இதற்கான விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழக அரசின் "ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்" என்ற இணையதள முகவரியில் இருந்து படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று , எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment