23rd of June 2014
சென்னை:பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் மிஷ்கின் வாக்குவாதம் செய்தும் புதுபடத்துக்கு இசை அமைக்க மறுத்துவிட்டார்.டைரக்டர் மிஷ்கின் இயக்கும் திகில் படம் ‘பிசாசு. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் மிஷ்கின் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து இசை அமைக்க கேட்டார். தனது இசைக்கு படத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறி புதுபடத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்துவிட்ட£ராம். பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் வாக்குவாதம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் மிஷ்கின்.இதுபற்றி அவர் கூறும்போது,
பூட்டிய அறைக்குள் நானும், இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த விவாதத்தை நேரில் கேட்டதுபோல் சிலர் சொல்கிறார்கள். என்ன பேசினோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இளையராஜா சாரை எனது தந்தைபோல் மதிக்கிறேன். அவரிடம் வாக்குவாதம் செய்யமாட்டேன். ‘பிசாசு படத்துக்கு புதிய இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய உள்ளதுபற்றி அவரிடம் கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அருள் குரோலி என்ற புது இசை அமைப்பாளர் படத்துக்கு இசை அமைக்கிறார் என்றார்.
Comments
Post a Comment