கூலிங் கிளாஸ் அணியும் ஆண்களை பிடிக்காது: அனுஷ்கா!!!

14th of June 2014
சென்னை:அனுஷ்கா நடிகையாகி 8 ஆண்டுகளை கடந்து விட்டது. இருப்பினும், இதுவரை அவர் எந்த நடிகர்களுடனும் காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்களில் சிக்கியதில்லை. 
அந்த அளவுக்கு தனது கேரியர் டேமேஜ் ஆகாத அளவுக்கு இமேஜை இப்போது வரை காத்துக்கொண்டு வருகிறார் அவர்.

இந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே திருமணம் செய்து கொள்ளும் உறுதியான முடிவில் இருக்கிறார்.

அதனால் அவரது பெற்றோர் வரன் பார்க்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தனக்கு எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்பதை பெற்றோரிடம் வெளிப்படுத்தியுள்ளாராம்.
அதனால், அனுஷ்காவின் மனசுக்குப்பிடித்தமான அவர் சொன்ன அழகு, குணாதிசயம் கொண்ட வரனை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

அப்படி அனுஷ்கா எந்த மாதிரி குவாலிட்டியான மாப்பிள்ளையை விரும்புகிறார் என்று கேட்டபோது, என்னை மட்டுமே நேசிப்பவராக, எனக்காகவே வாழ்பவராக இருக்க வேண்டும்.

அதோடு, மனதில் அவர் எதையும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும. அப்படி இருந்தால்தான் எந்த மாதிரியான குடும்ப சண்டையையும் எளிதில் அறிந்து தீர்த்துக்கொள்ள முடியும்.
 
மேலும், நான் யாரையும் அவர்களின் கண்களையும், சிரிப்பையும் பார்த்தே அவர்களின் மனதை அறிந்து கொள்வேன். அதனால், யாராவது என்னிடம் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பேசினாலே எனக்குப்பிடிக்காது. அதனால், கூலிங் கிளாஸ் போட்டு தன் கண்களை மறைத்துக்கொள்ளாத மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் எனறும் தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளாராம் அனுஷ்கா.

Comments