பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் சந்தோஷ் சிவன்!!!

20th of June 2014
சென்னை::இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழும் சந்தோஷ் சிவ, தயாரிப்பாளர் இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக இந்திய திரையுலகில் திகழ்ந்து வருகிறார்.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கும் சந்தோஷ் சிவனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பம்தஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

இந்த நிலையில், மேலும் ஒரு கெளரமாக, பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சந்தோஷ் சிவன், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.


உலக புகழ்ப் பெற்ற திரையுலக ஜாம்பவான்கள் கலந்துகொண்ட இந்த கல்லூரி வகுப்புகளில் நடைபெறும் செமினார்களின் சந்தோஷ் சிவன், கலந்துகொண்டு தனது சினிமா அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

இதற்காக வரும் ஜூலை 11ஆம் தேதி சந்தோஷ் சிவன் லண்டன் செல்கிறார். இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments