2nd of June 2014
சினிமா நட்சத்திரங்கள் நடிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டும் இன்றி, தற்போது விளையாட்டுகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அந்த வகையில், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற பெயரில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கடந்த நான்கு வருடங்களாக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கிரிக்கெட் லீக் போட்டியைப் போல, பேட்மிண்டன் போட்டியிலும் திரையுலக பிரலங்கள் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளனர். அதன் முதல்படி தான் இந்த பேட்மிண்டன் போட்டி.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 8,9.10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டியில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், நடிகைகள் ஜனனி ஐயர், ஓவியா, லிசி பிரியதர்ஷன், நமீதா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஆரி, ஆதி, மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, ரிச்சர்ட் ரிஷ், எடிட்டர் பிரவீன் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
இப்போட்டியில் வெறும் நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி, ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து சினிமா துறையினரும் கலந்துகொண்டு விளையாட உள்ளார்கள். தற்போது இப்போட்டியில் விளையாடும் பிரபலங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், யார் யார் விளையாடுகிறார்கள் என்ற இறுதி பட்டியலை விரைவில் வெளியிட உள்ளனர்.
இந்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக், தொடரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபல பேட்மிண்டன் வீராங்கணையும், அர்ஜூனா விருது பெற்றவருமான பி.வி.சிந்து கலந்துகொண்டு இப்போட்டியின் லோகோவையும், போட்டியில் விளையாட இதுவரை தேர்வான பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டார். மேலும் இப்போட்டியின் பிராண்ட் தூதராக பி.வி.சிந்து இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்..
சென்னை;சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விளையாடும்
பேட்மிண்டன் போட்டி 'இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக்' (Indian
Badminton Celebrity League) என்ற பெயரில் நடைபெற உள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் நடிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டும் இன்றி, தற்போது விளையாட்டுகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அந்த வகையில், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற பெயரில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கடந்த நான்கு வருடங்களாக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கிரிக்கெட் லீக் போட்டியைப் போல, பேட்மிண்டன் போட்டியிலும் திரையுலக பிரலங்கள் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளனர். அதன் முதல்படி தான் இந்த பேட்மிண்டன் போட்டி.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 8,9.10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டியில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், நடிகைகள் ஜனனி ஐயர், ஓவியா, லிசி பிரியதர்ஷன், நமீதா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஆரி, ஆதி, மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, ரிச்சர்ட் ரிஷ், எடிட்டர் பிரவீன் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
இப்போட்டியில் வெறும் நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி, ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து சினிமா துறையினரும் கலந்துகொண்டு விளையாட உள்ளார்கள். தற்போது இப்போட்டியில் விளையாடும் பிரபலங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், யார் யார் விளையாடுகிறார்கள் என்ற இறுதி பட்டியலை விரைவில் வெளியிட உள்ளனர்.
இந்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக், தொடரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபல பேட்மிண்டன் வீராங்கணையும், அர்ஜூனா விருது பெற்றவருமான பி.வி.சிந்து கலந்துகொண்டு இப்போட்டியின் லோகோவையும், போட்டியில் விளையாட இதுவரை தேர்வான பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டார். மேலும் இப்போட்டியின் பிராண்ட் தூதராக பி.வி.சிந்து இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்..
Comments
Post a Comment