சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம்!!!

19th of June 2014
சென்னை:சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு- பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவும் ரஞ்சிதா கூறினார்
 
பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசி ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் நித்யானந்தா திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு விஐபி பிரேக் தரிசனத்தில் அவர்கள் ஏழுமலையான தரிசித்தனர்.
 
அப்போது ரஞ்சிதா காவி உடை அணிந்து நீளமான மாலையை அணிந்திருந்தார். சாமியார் போலவே தோற்றமளித்தார். நித்யானந்தா தனது கழுத்தில் தங்க நகைகளை அணிந்து இருந்தார். அங்குள்ள பக்தர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. எனினும் சிரித்தவாறே ஆசீர்வாதம் வழங்கிவிட்டு நித்யானந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Comments