23rd of June 2014
சென்னை:கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு சினிமாவில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவர்
சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம்
காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. அதனால் அங்குள்ள
முன்வரிசை நடிகர்கள் போட்டி போட்டு சமந்தாவுக்கு சிபாரிசும் செய்து
வந்தனர்.
இந்த நிலையில், அனுஷ்கா, தமன்னாவைப் போன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தான் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சமந்தா, நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தபோது அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது.

அதனால், பின்னர் தமிழைப்பற்றி யோசிக்காமல் இருந்த சமந்தாவுக்கு அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தபோது, தமிழ் சினிமா மீது ஒரு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதையடுத்து விஜய்யுடன் கத்தி படமும் கிடைத்ததால் அடுத்து தமிழில் முதலிடத்தை பிடித்து விட வேண்டும் என்று இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடிப்பதை குறைத்து விட்டு. தமிழுக்கு கூடுதல் நேரத்தை செலவழித்து வருகிறார் சமந்தா.
அந்த வகையில், அஞ்சான், கத்தி படங்களைத் தொடர்ந்து பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் நடித்து வருபவர், அதையடுத்து, அஜீத் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். அந்த படத்தை அஜீத் நடிப்பில் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறாராம். மேலும், தற்போது கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்திலேயே சமந்தா நடிக்க வேண்டியவர், கால்சீட் பிரச்சினை காரணமாக, அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment