மாஜி காதலன் பிரபுதேவா காதல் சின்னத்தை அழிக்க லேசர் சிகிச்சை: நயன்தாரா முடிவு!!!

14th of June 2014
சென்னை:மாஜி காதலன் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியுள்ள நயன்தாரா அதை அழிக்க முடிவு செய்துள்ளார். நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார்.
 
பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.அவர் ரீ என்ட்ரி ஆகி நடிக்க வந்ததும் சில படங்களில் அந்த பெயர் பளிச்சென தெரிந்தது. இதேபாணியில் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனும் காதலித்து வந்தனர். காதலன் நினைவாக தனது கழுத்தில் ரன்பீர் பெயரை பச்சை குத்திக்கொண்டார் தீபிகா.
பின்னர் இருவரும் பிரிந்தனர். கழுத்தில் குத்திக்கொண்ட பச்சையை சமீபத்தில் குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தபோது அழித்தார். இதை நிரந்தரமாக அழித்தாரா? அல்லது மேக் அப் போட்டு மறைத்துவிட்டாரா? என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், தீபிகாவின் இந்த விளம்பரம் நயன்தாராவுக்கு உறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
 
தனது கையில் குத்தியிருக்கும் பிரபு என்ற பெயரை அழிக்க நயன்தாரா முடிவு செய்திருக்கிறார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்கும் நயன்தாரா லேசர் சிகிச்சை மூலம் மாஜி காதலன் பெயரை அழிக்க எண்ணி இருக்கிறாராம்

Comments