கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார் ஜெய்!!!

20th of June 2014சென்னை:நடிக்கும் படங்களில் எல்லாம் பயந்த சுபாவமாகவே வரும் ஜெய் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் ரேஸ், பைக் ரேஸ் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்த அஜீத் தற்போது நடிப்பில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.
 
ஆனால் அவரைத் தொடர்ந்து அவரது ரசிகரான நடிகர் ஜெய்யும் கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.  கடந்த ஏழு மாதங்களாக இதற்காக பயிற்சி எடுத்து வந்த ஜெய், வரும் ஞாயிறன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருக்கும் பந்தயத்தில் முதன் முதலாக கலந்துகொள்ள இருக்கிறார்.
 
சென்னை மற்றும் கோவையில் இரண்டு சுற்றுக்களாக நடைபெற இருக்கும் இந்த பந்தயத்தின் இறுதிச்சுற்றுக்கான போட்டி டெல்லியில் நடைபெறும். இந்த பந்தயங்களில் கலந்துகொள்வதுதான் அடுத்து ஃபார்முலா ரேஸ்களில் பங்கெடுப்பதற்கான முதல் படியாகும்.
 
படப்பிடிப்பு நாட்கள் தவிர மீதி நாட்களில் இந்த பயிற்சியில் தவறாமல் கலந்துகொண்டு கடந்த ஏழு மாதங்களாக பிராக்டீஸ் செய்டிருக்கிறார் ஜெய். சினிமா, ரேஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்ய முடியுமா என்கிற சந்தேகமும் முதலில் ஜெய்க்கு ஏற்பட்ட்தாம்.
 
ஆனால் இவரை மிகவும் கவர்ந்த கார் ரேஸ் வீரரான அப்துல்லா என்பவர்தான் சினிமா, ரேஸ் இரண்டிலும் சாதிக்கும் அஜீத்தை சுட்டிக்காட்டி ஜெய்க்கு நம்பிக்கை ஊட்டினாராம். மொத்தம் 29பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்தப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடும்படி ஜெய்க்கு அவரது பயிற்சியாளர்கள் ஊக்கம் அளித்துள்ளார்களாம்.

Comments