16th of June 2014
கத்தி பட ஷூட்டிங்கின் கடைசி நாளன்று, படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி பரிமாறிய விஜய், பரிசுகளும் கொடுத்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. வேகவேகமாக நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று புஷ்பா கார்டனில் நிறைவடைந்தது.

கடைசி நாளன்று அனைவருக்கும் விருந்தளித்து, பரிசு தர விரும்பினார் விஜய். ‘கத்தி’ கடைசி நாள் ஷூட்டிங்… குழுவினருக்கு பிரியாணி பரிமாறி, பரிசு கொடுத்த விஜய் அதன்படி பெரிய பந்தல் போட்டு, இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட அனைவரையும் அமர வைத்து, தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார்
விஜய். இந்த விருந்துக்கு படக்குழுவினர் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் வரவழைத்திருந்தார். விருந்து முடிந்த பிறகு, தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு உடைகள் மற்றும் பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் அய்ங்கரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment