இந்த பட்ஜெட் ரஜினிக்கு மட்டும்தான்; மற்றவர்களுக்கு கிடையாது- ஷங்கரிடம் திட்டவட்டமாக கூறிய தயாரிப்பு நிறுவனம்!!!

27th of June 2014
சென்னை:லிங்கா படம் முடிவடைவதற்குள் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்தவண்ணம் உள்ளன. லிங்கா ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ல் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ரஜினியிடம் கதை கூறி சம்மதம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

கதை பிடித்து ஓகே சொன்ன ரஜினி ஆனாலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டாராம். அதற்கு  கடினமான காட்சிகளில் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ரஜினி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது


இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் தமிழ் தயாரிப்பாளர்கள் தயங்கிய நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. படத்துக்கான பட்ஜெட்டாக ரூ 200 கோடி வரை கணக்குக் கொடுத்திருந்தாராம் ஷங்கர்.

படத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால் தற்போது ரஜினி தயங்குவதாக செய்தி வெளியானதால், இந்தப் படத்துக்கு ரஜினி ஹீரோ என்றால் மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தரமுடியும் என்றும், வேறு யார் நடிப்பதாக இருந்தாலும் ரூ 60 கோடிக்குமேல் செலவழிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களாம்.

இதனை தொடர்ந்து ரஜினிக்கு அதிக ரிஸ்க் தராத வகையில் படத்தின் காட்சிகளை எடுக்க யோசித்துவருகிறாராம் இயக்குநர் ஷங்கர்.

Comments