ரஜினிகாந்த்-கருணாநிதி திடீர் சந்திப்பு!!!

9th of June 2014
சென்னை::நடிகர் ரஜினிகாந்த் நேற்று திமுக தலைவர் மு.கருணாநிதியை திடீரென்று அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

கடந்த 3ஆம் தேதி கருணாநிதி தனது 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அன்றைய தினம் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இயலாததால், நேற்று ரஜினிகாந்த் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.
 
மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கோச்சடையான்' படத்தை காண வருவதற்காக கருணாநிதிக்கு ரஜினிகாந்து அழைப்பு விடுத்துள்ளார்.

Comments