இனிதே நடந்தது விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம்!!!

8th of June 2014
சென்னை:தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் காதல் ஜோடியான இயக்குனர் விஜய் – அமலாபால் வெற்றிகரமாக தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். நேற்று கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி விஜய்யும் அமலாபாலும் பரஸ்பரம் மோதிரம் அணிவித்துக்கொள்ள திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது. இவர்களது திருமணம் வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
 
கேரளாவில் நடந்தாலும் இந்த நிச்சயதார்த்த விழாவில் திடீர் சர்ப்ரைஸாக விக்ரம், அனுஷ்கா, ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டு இயக்குனர் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்தனர். தெய்வத்திருமகள் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து அமலாபாலும் அனுஷ்காவும் மிக நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments