அனிருத், ஸ்ருதிஹாசன் விடிய விடிய உல்லாச ஆட்டம்; ட்வீட்டரில் படங்கள்!!!

30th of June 2014
சென்னை:மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசை Shruti Haasan’s late night fun with Anirudh யில் ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி, இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ’3′ படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி.
 
இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம். அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி.
 
இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்… ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments