9th of June 2014
சென்னை::உலகெங்கிலும் ஆறு மொழிகளில் 2டி மற்றும் 3டியில் 4000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘கோச்சடையான்’ படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு இன்னும் குறைந்தபாடில்லை. இந்த மூன்றாவது வாரத்திலும் கூட தென்னிந்தியாவில் மட்டும் 350 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது ‘கோச்சடையான்’.

அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவில் இந்த்ப்படத்தை திரையிட்டபோது அங்கிருந்த தொழிநுட்ப வல்லுனர்கள் இந்தியாவில் இருந்து இந்தமாதிரி ஒரு படம் எடுத்திருக்கிறார்களா என ஆச்சர்யப்பட்டு எழுந்து நின்று கைதட்டினார்களாம்.
அதுமட்டுமல்ல விரைவில் ஜப்பானிலும் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதோடு பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டிலும் படத்தை திரையிட்டுக்காட்ட இருக்கிறார்களாம். இதுதவிர உலக திரைப்பட விழாக்கள் அனைத்திலும் கலந்துகொள்ள கோச்சடையானுக்கு அழைப்பு வந்துகொண்டு இருக்கிறதாம். இதன் இரண்டாம் பாகத்திற்கு இப்போதே வரவேற்பு இருப்பதால் அதுபற்றியும் தயாரிப்பாளர்கள் சீரியஸாக ஆலோசித்து வருகிறார்களாம்.
Comments
Post a Comment