பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்!!!

9th of June 2014
சென்னை::பி
ரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தார்.
 
அவருடன் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், தந்தை சுரேந்திர ஷெட்டியும் சென்றனர். பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார். இதுகுறித்து ஷில்பா கூறுகையில்,
 
‘நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்கள் மற்றவர்களுக்கு பார்வை வழங்கும் என்ற செய்தி இப்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி தோல்வி குறித்து கேட்டபோது, ‘நான் அந்த தோல்வியை மறக்க நினைக்கிறேன். அணி வீரர்களுக்கு இது ஒரு பாடம்’ என்று பதில் அளித்தார்.
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? என்ற கேள்விக்கு,
 
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று ஷில்பா பதில் கூறினார்.

Comments