அட…என்ன ஆச்சரியம்: நயன்தாரா வெளியிட…த்ரிஷா பெற்றுக் கொள்ள!!!

27th of June 2014
சென்னை:அட…என்ன ஆச்சரியம்…இப்படி ஒரு படத்தோட ஆடியோ ரிலீசுக்கு தமிழ் சினிமாவோட இரண்டு முக்கிய முன்னணி ஹீரோயின்கள் வர்றாங்கன்னா, அது யார் படமா இருக்கும்….கரெக்ட்…நீங்க நினைச்சது சரிதான்…ஆர்யா படத்துக்குதான இப்படி அழகழகான ஹீரோயின்ஸ்லாம் வருவாங்க…
 
ஆர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பியூப்புள் தயாரிப்பில் ‘நான்’ பட இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா,  மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா, த்ரிஷா கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி உள்ளது. இப்படத்தின் டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனக்குக் கிடைக்கும் பெயருக்கும் புகழுக்கும்  மறைந்த தன்னுடைய குரு ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாதான் காரணம் என்கிறார் குருபக்தியுடன் அவருடைய பெயரை தன் பெருடன் இணைத்துள்ள ஜீவா சங்கர்.
 
நயன்தாரா, த்ரிஷா அவங்க நடிக்கிற படத்தோட விழாவுக்குக் கூட வர மறந்து போயிடுவாங்க, ஆனால், ஆர்யா அழைக்கிற விழாவுக்கு வராம இருக்க முடியுமா…

Comments