14th of June 2014
சென்னை:பரதேசி படத்திற்கு பிறகு பாலாவின் அடுத்த படைப்பு தாரைதப்பட்டை. இந்த படத்தில் சசிக்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
இதில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்துள்ளனர். பிறகு பாலாவுடனான நட்பின் காரணமாக விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் படத்தில் சூர்யா சில காட்சிகள் நடித்தார்.
தற்போது பாலா இயக்கும் படம் ’தாரை தப்பட்டை’. இது கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் விக்ரம், சூர்யா இருவரும் படத்தின் ஒரு காட்சியில் கரகாட்டத்தை பார்ப்பது போல் வருகிறதாம். பாலாவிற்காக இருவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறா
ர்களாம்.
Comments
Post a Comment