ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார்!!!

15th of June 2014
சென்னை:ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார்.கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை படங்கள் 2ல் நடித்தார்.

தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு ‘விடியும் முன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உறவினர் மகன் வருண் தேஜ் ஜோடியாக ‘யவனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கொளுத்தும் வெயிலில் ஆந்திராவில்.
 
நடந்தது. ஆனாலும் காரசாரமான ஆந்திர உணவை வெளுத்துகட்டினார் பூஜா.இதுபற்றி அவர் கூறும்போது, ‘யவனம் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்தது. மண்டை காயும் வெயில் கொடுமையாக இருந்தது. ஆனாலும் உணவு உச்கொட்ட வைக்கிறது. ஆளை அசத்தும் ஆந்திரா காரம் இப்போது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.
 
கண்களை கலங்க வைக்கும் காரமும், மணமும் நிறைந்த அந்த உணவு பிரமாதம். சாப்பிட்டதும் சொர்க்கத்துக்கே சென்றுவிட்டதுபோல் உணர்வு. இனி ஷூட்டிங் முழுவதும் உணவுக்கு தடை எதுவும் இல்லாமல் வெளுத்துக்கட்டப் போகிறேன் என்றார்.

Comments