19th of June 2014
சென்னை:நடிகர் விஜய் சிறப்பு பேட்டி வருமாறு:–
சென்னை:நடிகர் விஜய் சிறப்பு பேட்டி வருமாறு:–
கேள்வி:– நமது ஜனநாயகம் பற்றி…?
பதில்:– உலக நாடுகள் பொறாமைப்படுவதே நமது ஜனநாயகத்தைப் பார்த்துதான். பள்ளியில் எப்படி எல்லோருக்கும் சீருடை சாத்தியமோ, அதேபோல மக்களின் ஏற்றத்தாழ்வுகள் சீர்பட வேண்டும்.
கேள்வி:– இளமை ரகசியம் என்ன?
பதில்:– அன்புதான். எனது ஒவ்வொரு நல்லது, கெட்டதிலும் என்னைத் தாங்கிப் பிடிக்கும் தமிழ் நெஞ்சங்கள், அவங்க தரும் உற்சாகம்தான் இந்த இளமையின் ரகசியம்ன்னு வச்சுக்குங்களேன்.
கேள்வி:– தொடர்ந்து சத்தமே இல்லாமல் மக்களுக்கு உதவி செய்து வரும் நீங்கள், எதிர்காலத்தில் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?
பதில்:– ‘‘சத்தமே இல்லாமல் உதவி செய்கிறேன் என்று உங்கள் கேள்வியிலேயே பதில் சொல்லிட்டீர்களே… அதுதான் எனது பிறவிக்குணம். எதிர்காலத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், இதேபோன்று உதவியை பல மடங்கு செய்ய வேண்டும் என்பதுதான்’’.
கேள்வி:– ரசிகர்களுக்கு சொல்ல விரும்பும் பிறந்த நாள் செய்தி?
பதில்:– என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு வணக்கம். வழக்கமாக நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன்.
நீங்களும் ஒரு படி மேலே போய் அந்தந்த ஏரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம், கண்தானம், ரத்ததானம், மாணவர்களுக்கு லேப்–டாப், பெண்களுக்கு தையல்மிஷின், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதைச் செய்து வருகிறீர்கள். உங்களது இந்த செயல்பாடுகள் எனக்கு சந்தோஷமாகவும், அதே நேரம் பெருமையாகவும் இருக்கிறது.
உங்களது இந்த சமூகத் தொண்டு மேலும் பல மடங்காக உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தால் மட்டுமே முடியும். நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் சரி, அதில் உறுதியோடும், உண்மையோடும், உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியைப் பெறுவீர்கள்.
உங்கடைய ஒவ்வொருவரின் வியர்வைக்கும் விலையுண்டு. நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெறுவது போல். ஆகவே உண்மையோடு உழையுங்கள். உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள். இதுவே உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கும் என் பிறந்தநாள் பரிசாகும்.
இவ்வாறு விஜய் கூறினார்.
Comments
Post a Comment